Wednesday, November 9, 2011

ஒரு நண்பன் இருந்தால்...

விழியின் நீர் கன்னத்தை தொடும் முன், கைகளில் ஏந்தும் ஒருவன்...
என் "ஹ்ம்ம்ம்" க்கும், "ஹ்ம்ம்கும்ம்" க்கும், வித்தியாசம் அறிந்தவன்..
எனக்காக என்னுடன் வாழ்பவன்,
நான் இல்லையேல் உலகம் இல்லை என்பவன்..

நீல வானம் கடலை தொடும் எல்லை அறிந்தாலும்,
அவன் அன்பின் எல்லை அறிய இயலாது..
இது போதும் என்று நான் விலகி நின்றாலும்,
இன்னும் இருக்கிறது பார் என்பான் அக்கறையுடன்..

உலக நடப்பு காரணங்களை அலசுபவன்,
என் மேல் கொண்ட பரிவுக்கு காரணம் புரியாமல் விழிப்பான்..
ஆழ்ந்த உறக்கத்திலும் அலையாய் வந்து அடிப்பவன்,
ஆறாத ரணங்களையும் தனதாக்கி, லேசாக மாற்றுவான்..

என் தனிமையை விரட்டி அடித்து, நிழலாய் துணை இருப்பவன்..
காலம் பிரிக்கும் என்று நான் பதற, மரணம் ஒன்றே பிரிக்க கூடும் என்பவன்...