குடும்ப கௌரவத்தை சீர் அழித்து விட்டாய்..
கொதித்தார் அப்பா...
அவன் வேண்டாம் என்று சொல்லி விடம்மா...
கதறினால் அம்மா..
ஏன் என்னிடம் கூட சொல்லவில்லை...
புலம்பினான் அண்ணன்..
விட்டுத்தள்ளு... இனிமேல் படிப்பில் கவனம் செலுத்து..
மிரட்டினார்கள் தோழிகள்..
கொஞ்சம் நாள் போகட்டும்.. பேசி பார்க்கலாம்...
தேற்றினார்கள் நண்பர்கள்...
அவள் அப்படித்தான் பண்ணுவாள் என்று எதிர்பார்த்தோம்..
கேலி பேசினார்கள் உறவினர்கள்...
அப்படி என்ன தப்பு செய்தேன் என்று நான் விழிக்க,
நேற்று இரவு தாமதம் ஆகியதால், இருச்சக்கர வாகனத்தில், நண்பன் இறக்கி விட்டது ஞாபகம் வந்தது...
தலையில் அடித்து கொண்டேன்...!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment