Tuesday, April 2, 2013

டேய் அண்ணா...

ஓயாமல் சண்டை போட்ட நாட்கள்,,
சலிக்காமல் செய்த சேவைகள் ,,
கை பிடித்து நடந்த தருணங்கள்,,
உன் முதல் சம்பளத்தில் எனக்கு வாங்கிய புடவை,,
என் பிடித்தத்தில் உனக்கு வாங்கிய கை கடிகாரம்,,
சிறு சண்டையை சமாதனம் செய்ய நீ அனுப்பிய குறுந்தகவல்கள்,,
வேலை தேடி நீ வேறு ஊர் செல்கையில் நான் சிந்திய கண்ணீர் துளிகள்,,
தொலைவில் இருந்தும் தினம் பல முறை அழைத்து "நல்லா இருக்கியா" என்று விசாரித்தது,,
பரஸ்பரம் புரிந்து கொண்டு என் காதலை சேர்த்து வைக்க நீ போராடியது,, 

இவை அனைத்தும் இனி கிடைக்காது என்று நான் ஏங்கி அழ, 
"முதலில் கல்யாணம் முடித்து உன்னை அனுப்பி வைக்க வேண்டும்" என்று எப்படித்தான் உன்னால் சொல்ல முடிகிறதோ !!

No comments:

Post a Comment